வட இந்தியா போன்று தமிழகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு!

Update: 2022-05-26 11:53 GMT
வட இந்தியா போன்று தமிழகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு!

வட இந்தியாவில் நடைபெறுவதை போன்று இந்து சாமியார்கள் மாநாடு விரைவில் தமிழகத்திலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு மதுரையில் வருகின்ற ஜூன் 4,5 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் நாட்டில் உள்ள அனைத்து சாமியார்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடஇந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்து துறவிகள் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது வழக்கம். இந்து தர்மத்தை காக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இதில் பேசுவார்கள்.

இந்நிலையில், வடஇந்தியா பாணியில் தமிழகத்திலும் சாமியார்கள் மாநாடு நடத்துவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஸ்வ ஹிந்த பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோம் பேரவையின் மூலம் மாநில மாநாடு ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்து ஏராளமான துறவிகள் கலந்து கொள்வார்கள். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்றார்.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News