ஒன்றரை கோடியில் துணைவேந்தர் பதவி: தமிழகத்தில் தலை விரித்தாலும் லஞ்சம்?
துணைவேந்தர் பதவிக்கு தன்னிடம் இருந்து 70 லட்சம் மோசடி செய்ததாக நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். குறிப்பாக அவருடைய மனுவில் கூறி இருக்கையில், தனியார் கல்லூரியில் நான் முதல்வராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் காரைக்குடியை சேர்ந்த சிலர் புதுச்சேரியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள் துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக கூறினார். இதற்கு முன்பாக ஒன்றரை கோடி வழங்க வேண்டும், பதவியை பெற்று பின் மூன்றரை கோடி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். அதன் அடிப்படையில் சில வங்கி கணக்குகளில் 95 லட்சத்தை செலுத்தினேன்.
ஆனால் உறுதி செய்த படி பதவி பெற்று தரவில்லை. ஆனால் அவர்கள் தன்னுடைய பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்கள். நிர்வாகத்தின் பேரில் 18 லட்சத்தை மட்டுமே திருப்பி கொடுத்தார்கள். மீதி தொகையை கொடுக்காமல் என்னை மேலும் இழுத்தடித்தார்கள். இது தொடர்பாக தற்போது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். ஆனால் அதன் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. என்னுடைய தொகையையும் மீண்டும் வாங்கி தரவில்லை, இந்த விசாரணை வேறு அமைப்புக்கு மாற்று உத்தரவிட வேண்டும் என்று அவருடைய மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இளங்கோவன் நீதிபதி முன்னிலையில் அமரவுக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி பணத்தை திரும்ப கொடுத்துவிட்டதாக உறுதி எழுந்ததால் இந்த புகாரை முடித்து வைக்கப்பட்டது என்றார். விசாரணை முடிவில் மனுதாரர் புகார் தீவிரமானது தனது புகார் கொடுத்து புதிதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கை முடித்து வைத்து இருக்கிறார். துணைவேந்தர் பதவிக்கு தற்போது கோடிகளை கொடுக்கின்ற நிலைமையில் கல்வி மோசமாகிவிட்டதா?
Input & Image courtesy: News