லஞ்சப்பணத்தில் வாரி சுருட்டிய சொத்துக்கள்: நாகர்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் விடிய, விடிய சோதனை!

பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி என்பவர் தனது தனது வருமானத்திற்கும் அதிகமாக 171.78 சதவீத சொத்துக்களை சேர்த்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 14:18 GMT

பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி என்பவர் தனது தனது வருமானத்திற்கும் அதிகமாக 171.78 சதவீத சொத்துக்களை சேர்த்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கண்மணி. இவரது கணவர் ஒரு அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இதனிடையே நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் வசித்து வந்த கண்மணி வீட்டில் கடந்த 13ம் தேதி அதிகாலை முதல் இன்று அதிகாலை 6 மணி வரைக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கண்மணி மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கி லாக்கரில் 88 லட்சம் ரூபாய், முதலீடு மூன்று லட்சம் ரூபாய் என்று ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அது மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் கண்மணி தனது வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீத சொத்துக்கள் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே இவ்வளவு சொத்தா என்று போலீஸ் உயர்அதிகாரிகள் வாயடைத்து போயுள்ளனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News