விராலிமலையில் உள்ள கருப்பண சுவாமி கோயில் சிலை உடைப்பு - மர்மநபர்கள் அட்டூழியம்!

விராலிமலையில் உள்ள கருப்பண்ண சுவாமி கோவிலில் சுவாமி சிலை உடைக்கப் பட்டுள்ளது.

Update: 2022-10-28 03:28 GMT

விராலிமலையில் சுனை கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தான் தற்போது சுவாமி சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை துணை கருப்பணசாமி கோவிலில் முருகன் கோவில் தென்புறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோபில் சுமார் 120 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இங்கு கருப்பணசாமி குதிரை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருகிறார். இக்கோவிலானது விரலி மலைப்பகுதி மக்களால் குலதெய்வம், காவல் தெய்வமாகவும் வழிபட்ட வழிபடுபட்டு வருகின்றது.


நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்து நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிலையில் இங்கு சுவாமி சிலை உடைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி ஏற்படத்தில் இருக்கிறது. பூசாரி மாலையில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கோவில் சன்னதி திறக்கும் பொழுது தான் சாமி சிலை உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் இருந்த வேல் அருவாள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் உள்ள கருப்பணசாமி சிலை தலை கீழே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசருக்கு தகவல் கொடுத்தார். மேலும் இந்த வேலையை செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். மேலும் தொடர்பாக பூசாரி அளித்த புகாரி பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News