தி.மு.கவின் 406வது வாக்குறுதி என்ன ஆனது? உண்ணாவிரதப் போராட்டத்தில் களம் இறங்கும் கோவில் பூசாரிகள்!

தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையின் போது வெளியிட்ட 406வது வாக்குறுதி என்ன ஆனது என்று போராட்டத்தில் களம் இறங்கும் பூசாரிகள்.;

Update: 2023-03-21 01:18 GMT
தி.மு.கவின் 406வது வாக்குறுதி என்ன ஆனது? உண்ணாவிரதப் போராட்டத்தில் களம் இறங்கும் கோவில் பூசாரிகள்!
2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் போது கோவில் பூசாரிகள் மற்றும் பேரவை மாநில பொறுப்பாளர்கள் மூலமாக எழுத்து பூர்வ கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஆளும் தி.மு.க அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 406 வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது வரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம்தோறும் சம்பளமாக பத்தாயிரம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு விஷுவ இந்து பரீசத் நிறுவனம், கிராம கோவில் பூசாரிகளின் பேரவை நிர்வாக அறங்காவலர் ஆகிய பலரும் இந்தப் போராட்டத்தில் இடம்பெற இருக்கிறார்கள்.

தற்போது வரை செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து கிராம கோவில்களிலும் இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவிற்கு பிறகு அவர்களுடைய குடும்பத்திற்கு அதை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Maalaimalar
Tags:    

Similar News