கோவை அருகே தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்.!

கோவை அருகே உள்ள பழங்குடியினர் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள், தப்பிப்பதற்காக அங்குள்ள மரங்களில் ஏறி தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-03 04:47 GMT

கோவை அருகே உள்ள பழங்குடியினர் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மக்கள், தப்பிப்பதற்காக அங்குள்ள மரங்களில் ஏறி தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க சுகாதாரத்துறையினர் முடுவு செய்துள்ளனர். அதன்படி அரசு அமைத்து வரும் சிறப்பு மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.


 



இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் பழங்குடியினர் அதிகளவு வசித்து வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்வராததால், அந்த கிராமங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி தொண்டாமுத்தூரை அடுத்துள்ள முள்ளாங்காடு மற்றும் கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் சென்றனர். அப்போது தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்த கிராம மக்கள், அங்குள்ள மரங்களில் ஏறி மறைந்து கொண்டனர்.




 


அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கிட்டத்தட்ட 600 பேர் வசிக்கின்ற கிராமத்தில் வெறும் 10 சதவீதம் அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News