சிதலமடைந்து வரும் 100 ஆண்டு பழமை வாய்ந்த சுந்தரவிநாயகர் கோயில்: கண்டு கொள்ளுமா அறநிலையத்துறை?

விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

Update: 2022-02-09 07:51 GMT

விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இருந்தாலும் கோயில் பராமரிப்பின்றியும், சிதலமடைந்தும் உள்ளது. இதனை சரி செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முருகன் சன்னதி உள்ளிட்ட மதில் சுவருடன் கூடிய கோபுரமின்றி நுழைவு வாயிலுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் கருவறை சதுர வடிவம் கொண்டுள்ளது.

மேலும், கோயில் கருவறையின் வெளிப்புற பகுதி உபபீடம், ஜகதி, முப்பட்டை குமுதம் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளிலும் மூன்று தேவக்கோட்டைகளுடன் காட்சி தருகிறது. இக்கோயில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு வைத்து கட்டப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. சிதலமடைந்து வருவதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக கோயிலை பராமரிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source,Image Courtesy: News 18 Tamilnadu



Tags:    

Similar News