வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முகவர்கள்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதனிடையே பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதனிடையே பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது. இதனிடையே தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அதில் வாக்க எண்ணும் மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. அதே போன்று செய்தியாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், செய்தியாளர்கள் என பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.