வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்.!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வருகின்ற மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.

Update: 2021-04-30 08:00 GMT

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வருகின்ற மே 2ம் தேதி எண்ணப்படுகிறது.




 


இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணப்பட்டுவாடா நடைபெற்றதால், உச்ச நீதிமன்ற அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.




 


இந்த மனுவின் மீது விசாரணை இன்று நடைபெற்றபோது, தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2ம் தேதி எண்ணுவதற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனு நிராகரிக்கப்பட்டதால் கிருஷ்ணசாமி அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்திற்கு செல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News