ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

Update: 2021-02-23 09:43 GMT

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதாவது காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2,556 ரூபாயும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள்.

அதே போன்று கட்டுனர்கள் குறைந்தபட்சமாக 2,337 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.3,500 கூடுதலாக பெறுவார்கள். உதியம் உயர்த்தப்பட்டதன் மூலமாக 23 ஆயிரத்து 793 பேர் பயன்பெறுவார்கள் என்றும், 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவால் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 

Similar News