புயல் அடித்தாலும் பேருந்தை இயக்குவோம்.. தனியார் பேருந்துகளின் அலப்பறை.!

புயல் அடித்தாலும் பேருந்தை இயக்குவோம்.. தனியார் பேருந்துகளின் அலப்பறை.!

Update: 2020-11-25 11:18 GMT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தடையை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தற்போது சென்னையில் இருந்து 350 கி.மீ நிலை கொண்டிருக்கும் இந்த புயலால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையைக் கடக்கின்ற நேரத்தில் 120 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.


இதனால் புயலை எதிர்கொள்வதற்காக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பேருந்துகள், ரயில் சேவைகள் 2 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் கூட இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில் அரசு உத்தரவை மீறி தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செஞ்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர்களை போலீசார் எச்சரிக்கை செய்து மீண்டும் திருப்பி அனுப்பினர். அரசு உத்தரவிட்டும் இது போன்று பொதுமக்களின் உயிர்கள் மீது விளையாடும் தனியார் பேருந்து உரிமங்களை ரத்து செய்ய பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News