விவசாய பாசனத்திற்காக வெலிங்டன் ஏரி திறப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.!

விவசாய பாசனத்திற்காக வெலிங்டன் ஏரி திறப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.!

Update: 2021-01-11 13:06 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாய பாசனத்திற்காக ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். 

இந்த தண்ணீர் திறப்பால், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி வட்டங்களில் உள்ள 23 ஏரிகள் மற்றும் 63 கிராமங்களில் கீழ்மட்ட கால்வாய்கள் மூலம் 9,209 ஏக்கர் நிலமும், மேல்மட்ட கால்வாய்கள் மூலமும் 14,850 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெரும்.

இந்நீர்தேக்கத்தின் மொத்த நீர்மட்ட உயரம்  29.72 அடியாக உள்ளது. தற்போது பெய்த மழையினால் நீர்மட்டம் 27.20 அடி தண்ணீர் உள்ளது. வெலிங்டன் நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 2580 மில்லியன் கன அடியில் 1920 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று வெலிங்டன் நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் நீரினை விவசாயிகள் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Similar News