தூத்துக்குடி அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்தி சென்ற கும்பல் கைது.!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சந்தேகப்படும்படி சென்ற வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் இருப்பது கண்டறியப்பட்டது.
திருச்செந்தூர் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை ரகசியமாக கடத்தி சென்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உமிழ்நீர் சர்வதேச அளவில் உயர்ரக வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சந்தேகப்படும்படி சென்ற வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனை ரகசியமாக கடத்தி சென்று விற்பதற்கு எடுத்து செல்லும்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். அதனின் மதிப்பு சுமார் இரண்டு கோடி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட ராம்குமார், முகமது அஸ்லம், ஜான் பிரிட்டோ உட்பட 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.