புதிய மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறையின் சிறப்புகள் என்ன?

புதிய மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறையின் சிறப்புகள் என்ன?

Update: 2020-12-28 10:20 GMT

புதிய மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உருவாவதன் மூலம், அப்பகுதி மக்களின் கால்நூற்றாண்டுக் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
காவிரி பாயும் டெல்டா பகுதியின் முக்கிய இடங்களில் ஒன்று மயிலாடுதுறையும் ஆகும்.

மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மயிலாடுதுறை, வரலாற்றில் இடம்பெற்ற இடங்களில் ஒரு சிறப்பு அம்சம் ஆகும். கிரைண்டர் உருவாக்கம், பட்டுப்புடவை நெய்தல், சீவல், கடலை மிட்டாய் தயாரிப்பு போன்றவை இந்த ஊரின் சிறப்புகள். கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் ஓடிய சிறப்பும் இந்த மயிலாடுதுறைக்கு உண்டு.

திருக்கடையூர், திருமணஞ்சேரி போன்ற சைவ, வைணவத் தலங்களும் இம்மாவட்டத்தின்தான் அமைந்துள்ளது. காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் நடக்கும் மயிலாடுதுறை துலா உற்சவமும், சீர்காழியில் நடக்கும் முலைப்பால் திருவிழாவும் மக்கள் அதிகளவில் பங்கேற்கும் விழாக்களாகும்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக தனி மாவட்டக் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ அல்லது திருவாரூர் வழியாகவோதான், மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு செல்லும் நிலை இருந்து வந்தது.

தஞ்சாவூருக்கு அடுத்த வரலாறு, புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பலவற்றைக் கொண்ட மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உதயமாவது அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.

Similar News