'இந்தியாவில் கிறிஸ்துவம் என்ன செய்கிறது' - திருமாவளவன் அப்படி என்னதான் கூறினார்?

'இந்தியாவில் கிறிஸ்தவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update: 2022-05-02 08:12 GMT

'இந்தியாவில் கிறிஸ்தவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது, 'தேர்தலில் ஒருமுறைகூட தனித்துப் போட்டியிடாமல் கூட்டணியில் பங்கு வகிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள திறமையான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி' என கூறினார், மேலும், 'விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி வைக்க அனைவரும் விரும்புவதாகவும்' அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியாவில் இந்துத்துவத்தை கிறிஸ்தவம் ஆதரிப்பதாக' கூறினார்.

சமீப காலங்களில் அதிகமாக மேடையில் கிறிஸ்துவ மதத்தை ஆதரித்தும் இந்து மதத்தை இழிவு படுத்தும் திருமாவளவன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.


Source - News 7 Tamil

Similar News