தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,176 ரூபாய்க்கு விற்கபட்டது. மேலும், விலையும் சற்று உயர்ந்தும் காணப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் 34,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் விலை 35,080 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 360 ரூபாய் குறைந்து 34,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,385 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதே போன்று 24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 38,152 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 37,792 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என தங்க நகை உரிமையாளர்கள் கூறுகின்றனர். விலை குறைந்து காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.