கடலூரின் தற்போதைய நிலை என்ன.? ககன்தீப் சிங் பேட்டி.!
கடலூரின் தற்போதைய நிலை என்ன.? ககன்தீப் சிங் பேட்டி.!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக மாறியது. இது புதுச்சேரிக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையில் கரையை கடந்தது. இந்நிலையில், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கடந்த 8 மணி நேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புயல் கரையை கடந்த பகுதியான புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. கடலூரில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதுன.
இந்நிலையில், கடலூரில் மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூரில் தற்போதைக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சாலை மார்க்கமாக கடலூர் சென்று, நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.