நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு எத்தனாவது இடம்? தேசிய நீர் விருதுகளை வென்று அசத்திய மாவட்டங்கள்.!

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு எத்தனாவது இடம்? தேசிய நீர் விருதுகளை வென்று அசத்திய மாவட்டங்கள்.!

Update: 2020-11-07 16:53 GMT

தேசிய அளவில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், முதல் மாநிலமாக தேர்வு பெற்று "தமிழகம்" தேசிய  நீர் விருதை பெறுகிறது.  நீர்வளங்களை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதில் ஆகிய செயல்களில் சிறப்பாக பணியாற்றும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை தேர்வு செய்து, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில், 'தேசிய நீர் விருதுகள்'  என்னும் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019ம் ஆண்டு, தேசிய அளவில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், முதல் மாநிலமாக தேர்வு பெற்று தமிழகம் இந்த தேசிய நீர் விருதை பெறுகிறது.  


நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக வீடியோ பற்றி மாநிலம் மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் முக்கியமாக பங்காற்றிய சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது.


அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மதுரை மாநகராட்சி 2ம் இடத்தை பிடித்துள்ளது.
நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
கோவை குலங்கல் பத்துகப்பு அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சக்திநாதன் கணபதி பாண்டியன் ஆகியோர் நீர் வீரர்கள் பிரிவின் கீழ் முதல், இரண்டாம் பரிசுகளை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Similar News