மூக்குத்தி அம்மன் சிடி காட்சி நீக்கம் - பாதிரியாருக்கு தி.மு.க கொடுத்த வாக்குறுதி என்ன.?

மூக்குத்தி அம்மன் சிடி காட்சி நீக்கம் - பாதிரியாருக்கு தி.மு.க கொடுத்த வாக்குறுதி என்ன.?

Update: 2020-12-15 12:20 GMT

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் கிறிஸ்தவ மத போதகர் சிடி வைத்து நோய்களை குணப்படுத்துவது போன்று அமைக்கப்பட்ட காட்சி டீசரில் வெளிவந்த போதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றின் இளம் தலைவர் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இப்போது அந்த அரசியல் தலைவரிடம் உதவி கோரியது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான பிஷப் சாம் யேசுதாஸ் என்பவர் தான் இந்த காட்சிகளை நீக்குமாறு அரசியல் தலைவரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. யார் அந்த இளம் தலைவர் என்று தெரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன அவரது கடந்த கால செயல்பாடுகள். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இவர் தி.மு.கவுக்கு வாக்களிக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தியது தெரிய வந்துள்ளது.

  அவர் இது பற்றி பேசும் வீடியோவில், "மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்த போது கூட அ.தி.மு.கவில் பல கிறிஸ்தவ எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள், பல கிறிஸ்தவ எம்.பிக்கள் இருந்தார்கள். ஆனால் முதலமைச்சரை எதிர்க்க அவர்களுக்கு திராணி இல்லை. விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவன் சட்டசபைக்குப் போனால் அவன் கிறிஸ்தவர்களுக்காக போராடி வெற்றி பெறுவான்."
 

Full View

 

"நம்முடைய மதக் கடமையை இந்த தேசத்திலே சுதந்திரமாக ஆற்ற, கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இந்த தேசத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நம் வாக்கு‌ நமது ஆயுதம். எனவே அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள். இந்த தேர்தலில் அகில இந்திய சிறுபான்மையினர் நலக் கட்சி தி.மு.கவை ஆதரிக்கிறோம். 

 "நாங்கள் அவர்களுக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம்.

அவர்களிடத்தில் பல வாக்குறுதிகளை பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று சொல்லி அந்த இயக்கத்தின் தலைவரும் முன்னின்று நடத்துகின்ற சகோதரர்களும் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். அந்நிய சக்திகள் நம்மை தடை செய்கின்றன. எனவே வருகிற நாட்களில் அதை மனதில் கொண்டு அகில இந்திய கிறிஸ்தவ உரிமை சங்கம் மற்றும் சிறுபான்மையினர் நல கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

 தங்களால் முன்புபோல நினைத்த இடத்தில் நற்செய்தி அறிவிக்க முடியவில்லை என்றும் மதப்பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்றும் புலம்பும் பாதிரியார் இதற்கு காரணமான சக்திகளை எதிர்கொள்ள வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும் ஜெபவீடு என்ற பெயரில் வீடுகளில் ஜெபக் கூட்டம் நடத்தி மதமாற்றம் செய்வதற்கு பல தடைகளை சந்திப்பதாகவும் இதை மாற்ற வேண்டுமென்றால் உண்மையான கிறிஸ்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

பிஷப்‌ சாம் யேசுதாஸ் தி.மு.க தலைவர்களுக்கு மிக நெருக்கமானவர். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான எஸ்ரா சற்குணத்துடனும் நெருங்கிய தொடர்பு உள்ளவர். யேசுதாஸ் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் சிடி காட்சிகளை வைக்கக் கூடாது என்று கூறி வந்த நிலையில் அவர் அரசியல் கட்சித் தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து தான் அந்த காட்சியை நீக்க வைத்திருக்கிறார் என்று பேசப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தி.மு.க தலைவர்கள் தனக்கு 'சில வாக்குறுதிகளை' அளித்து இருப்பதாக தன் வாயாலேயே கூறியுள்ளார்.

தாங்கள் இந்து விரோத கட்சி அல்ல என்றும் அனைத்து மதத்தினருக்கும் சமமான உரிமையும் மரியாதையும் அளிப்பவர்கள் என்றும் காட்டிக்கொள்ள திமுக மிகுந்த பிரயத்தனம் செய்து வரும் நிலையில், இந்து மத நம்பிக்கைகளையும் கடவுள்களையும் கேலி செய்த படத்தை கண்டு கொள்ளாத தி.மு.க அதில் வந்த ஒரே ஒரு கிறிஸ்தவர்கள் பற்றிய காட்சியை நீக்க வைத்தது அதன் உண்மை முகத்தை காட்டுவதாகவே அமைந்துள்ளது.
 

Source:

 

http://m.dinamalarnellai.com/web/districtnews/46403

Similar News