கரகாட்டக்காரன் பாணியில் ஓடும் பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம் - அவல நிலையில் தமிழக அரசு பேருந்துகள்

50 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் டயர்கள் சாலையில் கழன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் பதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-30 13:20 GMT

50 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின் டயர்கள் சாலையில் கழன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் பதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்பக்க சக்கரங்கள் கழன்று பல மீட்டர் தூரம் சாலையில் ஓடியதால் பேருந்து குடை சாய்ந்தது, இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரகாட்டக்காரன் படத்தில் கார் டயர் தனியாக கழன்று ஓடுவது போல் அரசு பேருந்தில் இருந்து இரு டயர்கள் கழன்று ஓடிய சம்பவம் சென்னை அருகே நிகழ்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அரசு பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கத்தில் உள்ள சங்கர வித்யாரியா பள்ளியின் அருகில் வந்த பொழுது அந்த பேருந்தில் பின்பக்கத்தில் உள்ள இரு சக்கரங்கள் துண்டாக உடைந்து ஜோடியாக சாலையில் ஓடியது.

இதனால் அந்த பேருந்து குடை சாய்ந்தது, பேருந்தில் இருந்து கழன்று பல மீட்டர் தூரம் ஓடிய சக்கரங்கள் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு வாகனம் மீதும் மோதாமல் சாலை வரும் ஒதுங்கி நின்றது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பிறகு அங்கு விரைந்த போலீசார் பேருந்து சாலையில் இருந்து நகர்த்தி விட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.


Source - Polimer News

Similar News