7 பேர் விடுதலை எப்போது.? சட்டத்துறை அமைச்சர் தகவல்.!
7 பேர் விடுதலை எப்போது.? சட்டத்துறை அமைச்சர் தகவல்.!;
7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்துள்ள ஆவணம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜீவ்காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஜனாதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்துள்ள ஆவணம் தமிழக அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆவணம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.