7 பேர் எப்போது விடுதலை.. ஓ.பி.எஸ்., பரபரப்பு தகவல்.!

7 பேர் எப்போது விடுதலை.. ஓ.பி.எஸ்., பரபரப்பு தகவல்.!

Update: 2021-01-23 14:46 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்களின் அரசின் உறுதியான முடிவு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் உள்ளனர். இதில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் விடுதலை செய்வது தமிழக ஆளுநரே முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்.

7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News