பொறியியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

பொறியியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!

Update: 2021-01-22 10:34 GMT

கொரோனா தொற்று குறைந்து வரும் நேரத்தில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் திறப்பதற்கான தேதியையும், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு பக்க தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை தளர்த்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கான இரண்டு மற்றும் 3ம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் பிப்., 18ம் தேதி தொடங்கி, மே மாதம் 21 ம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மே 24 ம் தேதியும், எழுத்துத் தேர்வுகள் ஜூன் 2ம் தேதியும் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல், ஏப்ரல் 12ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News