பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!

Update: 2020-12-17 18:27 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரையாண்டுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடக்கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்த பிறகு, முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் 3 மாவட்ட தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு அறிவிப்பு விரைவில் வரும் என கூறிய அவர், இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News