'சிரிச்சிட்டே ஒட்டு கேட்டு வந்த தி.மு.க எம்.எல்.ஏ எங்கே?' - வரட்டும் துரை சந்திரசேகரன் என காத்திருக்கும் நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள்

விளையும் நெற்பயிரை அழித்து சாலை போடும் தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டத்தில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். மேலும் இவர்களை தி.மு.க எம்.எல்.ஏ சந்திக்கவில்லை என்பது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-12-04 13:10 GMT

விளையும் நெற்பயிரை அழித்து சாலை போடும் தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டத்தில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். மேலும் இவர்களை தி.மு.க எம்.எல்.ஏ சந்திக்கவில்லை என்பது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவையாறு பகுதியில் சம்பா பயிரிட்ட நெல் வயல்களில் நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதனை எதிர்த்து பயிரை காக்கவும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் விவசாயியான எங்கள் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் நிலவரத்தை தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை விவசாயிகளாக எங்க பிரச்சனையை தீர்க்க வரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரப் பகுதி வழியாக செல்கிறது, திருவையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவையாறு புறநகரில் சாலை அமைக்கவும் அரசு முடிவு செய்தது. சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த சாலை பணிகளுக்கு கீழதிருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் சாலை அமைப்பதை நிறுத்த கூறி கடந்த 30ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் துவங்கினர். ஒரு நாளைக்கு ஐந்து விவசாயிகள் வீதம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில் சம்பா நடவு செய்யப்பட்ட வயல்வெளிகளில் நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குழந்தை மாதிரி விளைந்த பயிருக்கு உயிருடன் சமாதி கட்டுகிறீர்கள் இது நியாயமா உங்களுக்கு மனசாட்சி இல்லையா என கேட்டு பணியை நிறுத்த வலியுறுத்திய விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் தொடர்பாக அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது. 'திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் விளைச்சலில் அதிகமாக தரக்கூடியது. குறிப்பாக கண்டியூர், கீழதிருப்பந்துருத்தி உள்ளிட்ட ஊர்கள் முக்கியமாக விவசாயம் நடைபெறக்கூடிய பகுதி. அரசு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்ததுமே நாங்கள் எதிர்ப்பு பதிவு செய்தோம். பின்னர் எங்களுக்கு சாலை வேண்டாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தோம்.

ஆனால் அரசு அதனை காதில் வாங்காமல் விளையும் வயலில் சாலை அமைக்க ஜே.சி.பி கொண்டு வேலையை முன்னெடுத்து வருகிறது மேலும் இந்த தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் என்ன ஏதுன்னு கூட வந்து பார்க்கவில்லை. பயிர் போகுதே என விவசாயிகள் உயிரை கொடுத்து போராடும் முறையில் கூட அதிகாரிகளுக்கு போன் செய்து என்ன நடக்குது என நிலவரத்தை கேட்டாரே தவிர ஒரு விவசாயியாகிய அவரும் எங்களை பார்க்க வரவில்லை' என வேதனையுடன் தெரிவித்தனர்.



Source - Junior Vikatan

Similar News