யார்.. யார்.. புயல் கரையை கடக்கும்போது பார்க்க ஆசை.. இதனை இதனை செய்யுங்கள்.!
யார்.. யார்.. புயல் கரையை கடக்கும்போது பார்க்க ஆசை.. இதனை இதனை செய்யுங்கள்.!
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் பாண்டிச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் கடந்து செல்லும்போது கடலோர மாவட்டங்களில், சுமார் 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதேபோன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலர் புயல் எப்படி கரையை கடக்குவதை காண வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்கு வானிலை மையம் ஒரு இணையதளத்தை வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தின் windytv.com லிங்கை ஓபன் செய்தால் புயலானது எந்த திசையில் இருக்கிறது. எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பன பற்றி முழுமையாக தகவல்கள் போடப்பட்டிருக்கும். எனவே வானிலை மையம் வெளியிடும் தகவல்கள் இந்த வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம்.