மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதம் ஏன் ? - மத்திய அரசு விளக்கம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதம் ஏன் ? - மத்திய அரசு விளக்கம்
ஜப்பான் நிறுவனமான ஜிக்காவிடமிருந்து கடன் பெறும் நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த மார்ச் மாதம், கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இத்திட்டம் எப்போது நிறைவேறும் என்பதை அறிய, தென்காசி மாவட்டத்தில் உள்ள பவூரில் வசிக்கும் சமூக சேவகர் பாண்டியராஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் குறித்து 14 கேள்விகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கேட்டார்.
இந்த திட்டம் தாமதம் ஆனதற்கு மாநில அரசு மீது சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. முதல் பதில் என்னவென்றால், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (ஜிகா) மற்றும் தமிழக அரசு இடையே கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படவில்லை. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் இன்னும் மாநில அரசால் அமைச்சகத்திற்கு மாற்றப்படவில்லை எஎன்பது முக்கியமான காரணம் என தெரிவிக்கப்பட்டது.
மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாயில் அமையுவுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான நிதியை ஜப்பானிய பன்னாட்டு முகமை ஜிக்கா நிறுவனம் கடனாக வழங்கவுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஜிகாவுடனான கடன் ஒப்பந்தம் தாமதமானது. இதன் காரணமாக எய்ம்ஸ் கட்டுமானப்பணியில் தாமதம் ஏற்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.