நீதித்துறையில் இருந்து பி.டி.ஆர் நீக்கப்பட்டதன் காரணம் என்ன... ஆடியோ பின்னணி?
நீதித்துறையில் இருந்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டதன் காரணம் என்ன?
தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. குறிப்பாக திமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில் தற்போது மூன்றாவது முறையாக தமிழக அமைச்சர் அவையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த முறை மிகப்பெரிய மாற்றத்தை திமுக ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் சர்ச்சையில் தொடர்ச்சியான வண்ணம் சிக்கியதற்கு காரணமாக இருந்த பல்வேறு அமைச்சர்களின் பதவிகள் தற்போது பறிக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக அமைச்சர் அவையில் இடம் பெற்று இருந்த அமைச்சர்களின் பேச்சுக்கள் காரணமாக பொதுமக்களிடையே பெரும் அதிருப்தில் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பொது வெளிகளில் திமுக அமைச்சர்கள் வெளியிடும் வார்த்தைகள் மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் தான் இருந்து வருகிறது. சமீபத்தில் கூட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இருவரும் கடந்த ஒரு வருடத்தில் ரூ. 30,000 ஆயிரம் கோடி சொத்து குவித்துள்ளனர் என்ற பகீர் தகவலை கூறியிருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களும் பல்வேறு நபர்களும் கருத்துக்களும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக "பாஜக தலைவர் அண்ணாமலையார் வைத்த குற்றச்சாட்டை உறுதி செய்த பி.டி.ஆர் அவர்களின் பதவியை பறித்ததின் மூலம் ஊழலை ஒப்புகொண்டுள்ளார் முதல்வர்" என்றும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். எது எப்படியோ பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Input & Image courtesy: Vikatan