அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது அவசரம் காட்டுவது ஏன்.? உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி.!

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது அவசரம் காட்டுவது ஏன்.? உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி.!

Update: 2020-11-30 17:13 GMT

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளில் அவர் அரசிடம் ஆலோசிக்காமல் செயல்படுவதாக புகார் எழுந்து வந்தது.


அதுமட்டுமின்றி, அவர் மீது ஊழல் புகார்களும் எழுந்திருப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்த தமிழக அரசு, குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.

அதன் படி, துணை வேந்தர் சூரப்பாவிடம் கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சூரப்பா மீதான விசாரணை குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துணைவேந்தர்கள் மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், சூரப்பாவுக்கு எதிராக கடிதம் கிடைக்கப் பெற்ற நிலையில் அதில் முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டப்படுவது ஏன்? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரிக்க குழு அமைத்த அரசாணை பிரிவில் பெறப்பட்ட புகார்கள் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Similar News