தமிழக கோவில்களின் வாடகை வசூல் வரவுவைக்க தனி வங்கி கணக்கு: சட்டவிரோதமாக நடைபெறுகிறதா?

தமிழக கோவில்களில் வசூலாகும் வாடகை தொகையை வரவு வைக்க தனியாக 3வது வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற ஆணையர் அறிவிப்பு.

Update: 2022-03-12 02:06 GMT

தற்பொழுது தமிழக கோவில்களில் வராமலிருக்கும் வாடகை தொகைகள் மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆகியவற்றை அகற்றுவதில் மும்மரம் காட்டும் தமிழக அரசு. கடந்த சில நாட் மாதங்களில் பல்வேறு கோயில்களில் ஆகாமல் இருக்கும் வாடகை தொகை மற்றும் குத்தகைக் காரர்கள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை காசோலை மூலம் செலுத்தலாம் என்றும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பழமையான தமிழக கோவில்களில் இருந்து சுமார் 120 கோடிக்கு மேல் வாடகை வசூல் செய்ததாகவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. 


வசூல் ஆகாமல் இருக்கும் வாடகை தொகைகளை வசூல் செய்வதில் தமிழக அரசை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை. இருந்தாலும் கோவில் நிலங்களுக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் கட்டிடங்களுக்கான வாடகை வசூல் தொகையை வசூல் செய்து, அவற்றை அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் கோவில் செலவுகளுக்காக ஒப்படைப்பது இந்து சமய அறநிலையத்துறையின் பிரதான நோக்கம். கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் வாடகை வசூலிப்பது பல்வேறு குளறுபடிகள் தற்பொழுது அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. 


Images: Twitter source 

குறிப்பாக இது குறித்து ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள T. R. ரமேஷ் அவர்கள், "ஆணையர் அறிக்கையில் இருந்து வாடகை வசூலை மட்டும் வரவு வைக்க கோயில்களுக்கு 3வது வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோவில் மேலாளர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோரின் சம்பளத்திற்கு 25% வசூலிப்பதில் உள்ள தொகைகள் பயன்படுத்த படுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். எனவே வசூலாகாத பணத்தை ஏன்? தனியான மூன்றாவது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். அவற்றை இந்து சமய அறநிலையத்துறை எதற்காக பயன்படுத்தி வருகிறது? என்பதற்கான விளக்கத்தையும் தருமாறு பல்வேறு நபர்கள் கேள்வியும் தற்போது எழுப்பியுள்ளார்கள். பதில் கூறுமா? தமிழக இந்து சமய அறநிலையத்துறை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Input & Image courtesy: Twitter Post

Tags:    

Similar News