கன்னியாகுமரி: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு !
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் உடல் மோதிர மலை நீர் நிலை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய வேண்டிய மழை தற்போது 95 சதவீதம் அளவிற்கு பெய்துள்ளது. அதே போன்று மாவட்டத்தில் 90 சதவீதம் அணைகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: News 7 Tamil