முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தனது சகாவிடம் பேசி நிரந்தரத் தீர்வு காண்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்!

Update: 2022-04-15 12:31 GMT

தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் மிக நீண்டகாலமான பிரச்சனையாக பார்க்கப்படுவது முல்லைப் பெரியாறு அணை விவகாரம்தான். தற்போது கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அவரின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில் உள்ளது.

சமீபத்தில் கேரளாவில் சிபிஎம் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு இரண்டு மாநில உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்றார்.

இதனால் இரண்டு மாநிலங்களின் தலைமைகள் ஒன்றாக கருத்து கூறி வருவதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு கிடைத்து விடுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் முல்லைப்பெரியாறு அணை பற்றி சிபிஎம் கட்சி மாநாட்டில் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலமான பிரச்சினைக்கு ஸ்டாலின் முடிவு கட்டுவாரா அல்லது எப்பொழுதும் போல் பிரச்சனை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News