காங்கிரஸின் ஜல்லிக்கட்டிற்கு தடை, வெளிநாட்டிலிருந்து வரும் ராகுல் தனிமப்படுத்திக்கொள்வாரா? வெளுத்து வாங்கும் SG சூர்யா!
காங்கிரஸின் ஜல்லிக்கட்டிற்கு தடை, வெளிநாட்டிலிருந்து வரும் ராகுல் தனிமப்படுத்திக்கொள்வாரா? வெளுத்து வாங்கும் SG சூர்யா!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை ஜனவரி 14-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து, பொங்கல் பண்டிகையின் போது மதுரைக்கு அருகிலுள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் காணவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வயநாடு எம்.பி.யின் தமிழக வருகை அமைந்துள்ளது.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு மீதான தடையை கொண்டுவருவதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகித்ததால் ராகுல் காந்தியின் வருகையை பலர் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். காங்கிரஸ் தனது 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அறிவித்ததாக பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ராகுல் காந்தி தனது இத்தாலி பயணத்திற்குப் பிறகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாரா என்று அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் SG சூர்யா தனது கீச்சுகளில், ராகுல் காந்தியின் தமிழக வருகையை கடுமையாக விமர்சித்துள்ளார். பண்டைய தமிழர்களின் பாரம்பரியத்தை தடை செய்வதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
So @RahulGandhi whose #Congress party that actively ensured #Jallikkattu ban & again reiterated the same in 2016 Tamil Nadu election now wants to come & witness the sport. What a shame?? Shouldn’t the protestors shoo him away for his party’s treachery to #Tamils & #TamilNadu ?? pic.twitter.com/EnqJBAgUNo
— SG Suryah (@SuryahSG) January 12, 2021
காங்கிரஸ் தலைவர், தனது இத்தாலி பயணத்திலிருந்து இன்னும் திரும்பவில்லை என்று கூறப்படும் நிலையில், அவர் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தளுக்கு ஆளாகாமல் மக்கள் கூட்டங்களில் பங்கேற்க நேரடியாக தமிழகத்திற்கு வருவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர் எங்கிருந்து வருகிறார்? அந்த நாடு மரபணு மாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதா? யாருக்கும் எதுவும் தெரியாது. எவ்வளவு குழப்பத்தை காங்கிரஸ் கட்சி உருவாக்கும்?" என்று பா.ஜ.க தலைவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.