திண்டுக்கல்: நிதி நிறுவனங்களின் அட்டூழியத்தால் வீதியில் இறங்கி போராட்டம் செய்யும் பெண்கள்.!
திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை கட்ட சொல்லி நிர்பந்தம் செய்வதாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை கட்ட சொல்லி நிர்பந்தம் செய்வதாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற சமயங்களில் நிதி நிறுவனங்கள் பெண்களிடம் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்காக செல்லும் நிலை பல இடங்களில் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் பெண்களுக்கு கொடுத்த பணத்தை வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாவட்டங்களில் பல இடங்களில் பெண்கள் வீதியில் வந்து போராட்டம் செய்தனர். ஊரடங்கு காலத்தில் இப்படி பணம் கேட்டு தொல்லை கொடுப்பது சரியில்லை. எனவே 3 மாதங்கள் நிதி நிறுவனங்கள் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதே போன்ற நிலைதான் தமிழகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. கடந்த கால ஆட்சியில் கடன்களை திரும்ப பெறுவதற்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை கடன் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடாதது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.