தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1,000: பாதி மகளிரை கழிக்க திட்டம் போடும் தி.மு.க!

பட்ஜெட் தாக்கலில் தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் ரூபாய் ஆயிரம் மாதம் தோறும் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Update: 2023-03-21 01:23 GMT

தமிழக சட்டசபையில் 2023 மற்றும் 24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து இருக்கிறார். இதில் குறிப்பாக பல்வேறு நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வழியாக இருக்கிறது. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு நெய்தல் திட்டம் அமைக்க 2000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கோவையில் ரூபாய் 172 கோடி மதிப்பில் உலக தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.


கோவை, மதுரை நகர்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வளம்மிக்க வட்டாரங்கள் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் அதற்கு 100 கோடி செலவில் வட சென்னை வளர்ச்சி திட்ட போன்று திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 என்ற திட்டம் இடம்பெருமா? என்று ஒரு கேள்வி குறை இருந்து வந்தது.


இந்நிலையில் தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதியாண்டு முதல் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் இன் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் மகளிருக்கான உதவி தொகை ரூபாய் 1000 விளங்கும் திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மகளிர் உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News