கடலூர் அருகே மகளிர் குழு கடனை கட்ட சொல்லி மிரட்டல்.. ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பெண்கள்.!

திட்டக்குடி அருகே மகளிர் குழு கடன் தொகையை கட்ட சொல்லி குண்டர்களை வைத்து மிரட்டிய சம்பவத்தால், பெண்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-20 02:36 GMT

திட்டக்குடி அருகே மகளிர் குழு கடன் தொகையை கட்ட சொல்லி குண்டர்களை வைத்து மிரட்டிய சம்பவத்தால், பெண்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள இளமங்கலம் கிராமர். அந்த கிராமத்தில் பெண்கள் அனைவரும் மகளிர் குழு லோன் எடுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் கடன் தொகையை கட்டச்சொல்லி குண்டர்களை வைத்து சில தனியார் வங்கிகள் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது.




 


இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உடனடியாக அனைவரும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது லோன் கடனை கட்டச்சொல்வது நியாயம் இல்லை என பெண்கள் குற்றம்சாட்டினர்.


 



தற்போதைய சூழலில் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில், லோன் கடனை கட்ட சொல்லி, எல்.என்.டி, ஆர்.பி.எல், ஸ்பீங்கர், சி.சி.எஃப்.டி, டுசன், ஸ்டாட்டின், எக்டாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், மகளிர் குழு கடன்களை உடனடியாக கட்டியே ஆக வேண்டும் என்று குண்டர்களை வைத்து மிரட்டி வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இது போன்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News