'திராவிடன்' என கூறியது ஆங்கிலேயன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2022-07-11 01:51 GMT

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு அடித்தளமான முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் கடந்த 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இப்புரட்சியில் ஏராளமான இந்தியர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் ஜூலை 10ம் தேதி வீரமரணம் அடைந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு 216வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புரட்சியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது: இந்திய சுதந்திர போருக்கு முதலில் வித்திட்ட 1806ம் ஆண்டு சிப்பாய் புரட்சி வேலூரில்தான் துவங்கியது. மேலும், இந்தியா உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது. சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே சிறந்த பாரம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twitter

Tags:    

Similar News