அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் காலை இழந்த இளம் தமிழக வீராங்கனை - ஓடிச்சென்று உதவிய பா.ஜ.க

தவறான சிகிச்சை காரணமாக காலை இழந்து தமிழக விளையாட்டு வீராங்கனை BJP விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத்ரெட்டி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Update: 2022-11-13 06:12 GMT

தவறான சிகிச்சை காரணமாக விளையாட்டு வீராங்கனையின் கால் அகற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மருத்துவமனை கல்வி இயக்குனரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னை வியாசர்பாடி சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகள் பிரியா 17 வயது நிரம்பிய விளையாட்டு வீராங்கனை. சென்னை ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் இவர் படுத்து வருகிறார். மேலும் மாவட்ட மாநில அளவுகளிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கும் சென்று உள்ளார். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கால் முட்டி பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறிய கூறி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பெயரில் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்வின்றி இருந்ததன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிற்பிச்சுக்காக இவர் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.


இதற்கு இடையே பெரியார் நகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட இவர் தவறான சிகிச்சை காரணமாகவே இவருடைய கால் தற்பொழுது இழந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக இளம் வீராங்கனை ஒருவரின் கால் இலக்கப்பட்டு இருப்பது என்பது மக்களின் எதிர்ப்பாக இருந்து வருகிறது. தவறான சிகிச்சை காரணமாக காலை இழந்து தமிழக விளையாட்டு வீராங்கனை BJP விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத்ரெட்டி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News