சென்னை: முழுஊரடங்கை மீறியும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள்.!

சென்னை, பூந்தமல்லி அடுத்துள்ள வண்டலூர் மீஞ்சூர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-06-03 07:22 GMT

சென்னை, பூந்தமல்லி அடுத்துள்ள வண்டலூர் மீஞ்சூர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் வெளியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அடுத்துள்ள வண்டலூர், மீஞ்சூர் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பைக் சாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இளைஞர்கள் தங்களது வாகனங்களை செங்குத்தாக தூக்கி கொண்டு மிகவும் ஆபத்தை உண்டாகும் விதத்தில் சாலையில் செல்கின்றனர்.

அந்த சாலையில் சரக்கு வாகனங்கள் அதிகளவு சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சமயங்களில் இளைஞர்கள் சாகசங்கள் செய்யும்போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இளைஞர்கள் சாகசம் செய்யும் காட்சியை அச்சாலையில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சாலையில் உடனடியாக போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News