வாகன சோதனையில் மோதல்: உருட்டுக்கட்டை எடுத்த போலீஸ்.. பதிலுக்கு தென்னம் மட்டை எடுத்து தாக்கிய இளைஞர்.!
உசிலம்பட்டி அருகே உள்ள நல்ல தேவன்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட 6 பேர் விருவீடு காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே இரண்டு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அப்போது சோதனை சாவடியில் இருந்த பேரிகார்டு மீது மோதியதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு என்ற இடத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் போலீசாருக்கும் இளைஞருக்கும் மோதல் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள நல்ல தேவன்பட்டியை சேர்ந்த முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட 6 பேர் விருவீடு காவல்நிலைய சோதனைச்சாவடி அருகே இரண்டு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். அப்போது சோதனை சாவடியில் இருந்த பேரிகார்டு மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞர்களை தடுத்து விசாரணை செய்தனர். அப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வாயால் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்கா போலீஸ் ஒருவர் அருகாமையில் இருந்த வீட்டில் இருந்து ஒரு உருட்டுக்கட்டையை எடுத்து வந்தார்.
அதே போன்று இளைஞர் ஒருவரும் உடனடியாக அருகாமையில் இருந்த தென்னம் மட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின்போது மற்ற போலீசார் அந்த இளைஞர்களை தடுத்தனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து வீடியோவில் பதிவான முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசாரும், இளைஞர்களும் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் சோதனை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தாலும், சில இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.