கை துப்பாக்கியுடன் பிடிபட்ட இளைஞர்கள் - தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் பரபரப்பு
தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் இருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் இருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே கை துப்பாக்கி உடன் பிடிப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனை இட்ட பொழுது அவர்களிடம் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த முத்துராஜ் மற்றும் பால்துரை என்பது விசாரணைகள் தெரிய வந்தது, அவர்கள் இருவரும் நாட்டு கைதுப்பாக்கியுடன் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.