இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் - பிரதமர் மோடியால் உருபெறப்போகும் அசாத்திய திட்டம்!
PM to lay the foundation stone of Noida International Airport
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (நவம்பர் 25 ) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறவிருக்கிறது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும்
போக்குவரத்துத் தொடர்பையும் எதிர்காலத்திற்குத் தயாரான விமானப் போக்குவரத்துத் துறையை உருவாக்குவதையும் ஊக்கப்படுத்துகின்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நோக்கியதாக இந்த விமான நிலைய உருவாக்கம் இருக்கும். அண்மையில் தொடங்கப்பட்ட குஷிநகர் விமான நிலையம், அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட புதிய சர்வதேச விமானநிலையங்கள், இந்த மாபெரும் தொலைநோக்கி்ல் தனித்த கவனமாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் பன்முக வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.
இந்த விமான நிலையம் தில்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக தில்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு சேவை புரியும்.
ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்
வடக்கு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். அளவு மற்றும் திறன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மாற்றம் ஏற்படுத்துவதாக இந்த விமான நிலையம் இருக்கும். உத்தரப்பிரதேசத்தின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்துவதாக இது இருப்பதோடு உலகளாவிய சரக்குப் போக்குவரத்து வரைபடத்தில் இந்த மாநிலம் இடம்பெறுவதற்கு உதவும். மொத்தச் செலவு, சரக்குப்போக்குவரத்திற்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டைக் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும்.
இதில் உள்ள சரக்கு முனையம் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இது 80 லட்சம் மெட்ரிக் டன்னாக விரிவுப்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருட்களைத் தடையின்றி கொண்டுசெல்ல வசதிகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் அதிக அளவு முதலீடுகளை ஈர்த்தல், விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றிற்கு இந்த விமான நிலையம் முக்கியமான பங்களிப்பு செய்யும். இது ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.