குஜராத்தில் சமூக இடைவெளி கடைபிடித்து மசூதியில் தொழுகை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடிய இளைஞர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கபத்வஞ்ச் என்னுமிடத்தில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றதால் சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்க விடப்பட்டது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு ஒன்று கூடியதால் அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையம் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பல பொது சொத்துக்கள் வன்முறையாளர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது என்பதை அந்தப் பகுதியில் வெளியான செய்தித்தாள்கள் மூலம் அறிய முடிகிறது.
கலவரம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டு வீசியது. மேலும் கூடுதலாக காவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இஸ்லாமியர்களால் காவல் நிலையம் சூறை ஆடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பதும் பலமுறை காவல் நிலையங்கள் இஸ்லாமியர்களால் சூறையாடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் வன்முறையாளர்களை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.