ஈரான்-இஸ்ரேல் போர்!! இந்தியாவிற்கு ரஷ்யாவின் எண்ணெய் உதவி!!

Update: 2026-03-07 02:11 GMT

ஈரான்-இஸ்ரேல் போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 40-50% எண்ணெய் இறக்குமதி இந்த வழியாகவே நடக்கிறது.


இந்நிலையில் ரஷ்யா 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த எண்ணெய் அடுத்த சில வாரங்களில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடையும்.


ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பான பாதைகள் வழியாக வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் பாதிக்காது என கூறப்படுகிறது. இந்தியாவின் குறுகிய காலத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த விநியோகம் உதவியாக இருக்கும். 


கூடிய விரைவில் மத்திய எரிசக்தி அமைச்சகம் இந்த விநியோகத்தை ஏற்றுக்கொள்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News