பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக வெளியான அறிக்கை!!
By : Bharathi Latha
Update: 2026-01-31 01:55 GMT
2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, சிறப்பாக இருப்பதை காட்டுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடைந்துள்ளது. பணவீக்க அழுத்தம் அதிக அளவில் குறைந்துள்ளது. வலுவான உள்நாட்டுத் தேவையும், விலைகளில் நீடித்த மிதமான போக்கும் உள்ளது.
இந்நிலையில் இந்த 2025-26 நிதி ஆண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக உயர்ந்துள்ளது. இது, 2026-27ல் 7.4% ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2025 நிதி ஆண்டில் இது 4.8% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.