வருங்காலத்தில் லித்தியம் உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தை தகர்க்கும், இந்தியாவின் கனவு திட்டம்!

Update: 2021-02-28 10:51 GMT

லித்தியம் மிகவும் முக்கியத்துவம் மற்றும் சக்திவாய்ந்த ஒரு உலோகம். இதன் பயன்பாடு என்னவென்று பார்த்தால், முக்கியமான சிறப்பம்சமே! லேப்டாப், போன்கள் மற்றும் கார்கள் கூட இயக்க வைக்கும் சக்தி இதற்கு உள்ளது. இது நவீன நாகரீகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எந்த நாட்டில் அதிகமாக கிடைக்கிறதோ? அந்த நாடு மிகவும் வளமான நாடு என்று கூட சொல்லலாம். பேட்டரிகள் குறிப்பாக கார்களை இயக்கும் பேட்டரிகள் தயாரிப்பதற்கு இந்த லித்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று அனைத்தும் கணினி மயமாகி விட்டது. குறிப்பாக அனைத்தும் டிஜிட்டல் ஐ நோக்கி நகர்ந்து வருகிறது. ஆகவே சுகாதாரத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான தீங்கும் விளைவிக்காத பேட்டரிகள் மூலம் இயங்கும் தொழில்நுட்பத்திற்கு நாடு நகர்ந்து வருகிறது.


கடந்த பல காலங்களாகவே இந்தியா தன்னுடைய நம்பிக்கையை மேலும் உயர்த்துவதற்காக லித்தியம் வாங்க திட்டமிட்டு தான் வந்துள்ளது. ஏனென்றால், லித்தியம் பேட்டரிகள் ஆல் இந்தியாவில் உலகத் தலைவராக மாற்ற புதுடெல்லி பாரம்பரிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. லித்தியம் மாபெரும் கையிருப்பு இந்திய நிறுவனங்களுக்கு அனைத்து கேஜெட்டுகளுக்கும் பேட்டரிகள் தயாரிக்க அனுமதிக்கும்.

அர்ஜென்டினா, சிலி மற்றும் பொலிவியா ஆகியவை லித்தியத்தின் மிகப்பெரிய கை இருப்புக்களைக் கொண்டுள்ளன. கானிஜ் பிடேஷ் இந்தியா லிமிடெட் என்ற புதிய நிறுவனம். இது நால்கோ, இந்துஸ்தான் காப்பர் மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் இணைக்கப்பட்டது. கானிஜ் பிடேஷ் இந்தியா லிமிடெட் ஒரு குறிப்பிட்ட ஆணையைக் கொண்டுள்ளது. இது லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற மூலோபாய கனிம சொத்துக்களைப் பெறும். அதாவது, இந்த நிறுவனம் அர்ஜென்டினாவில் ஒரு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. சிலி மற்றும் பொலிவியா ஆகிய இரு சாத்தியமான ஆதாரங்கள் மூலம் லித்தியத்தின் இறக்குமதி அதிகரிக்கும் ஒரு ஒப்பந்தம்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற சிறிய மின்னணுவியல் சாதனங்களில் இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் பேட்டரி ஆகும். 2016 முதல், இறக்குமதியில் நான்கு மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியா 2019-20ல் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பேட்டரிகளை வாங்கியது.


ஆனால் தற்போது இந்தியாவை பேட்டரிகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் பல சலுகைகளையும் வழங்க உள்ளது. சொந்த நாட்டிலேயே முதலில் தயாரிப்பதற்கு மூலப்பொருட்கள் தேவை. எனவே இது உலகின் மிகப்பெரிய லித்தியம் கைஇருப்புக்களைக் கொண்ட முதல் மூன்று நாடுகளான அர்ஜென்டினா, சிலி மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ள உள்ளது.

 இந்தியா தனது   முதல் லித்தியம் சுத்திகரிப்பு நிலையத்தை குஜராத்தில் கட்டும். அரசுக்கு சொந்தமான நிறுவனம் இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். அது நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் ஆகும். ஆனால் உலகளாவிய லித்தியம் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவு பங்கை சீனா தான் வைத்துள்ளது. குறிப்பாக 73 சதவீத பங்கு. ஆனால், தற்போது இந்தியாவும் இந்த துறையில் முனைப்பு காட்டி வருவதன் காரணமாக வருங்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

லித்தியம் உற்பத்தியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா ஆதரவளிக்கும் என்று ஆஸ்திரேலிய தூதர் கூறியுள்ளார். "புதிய பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியைச் சுற்றியுள்ள இந்தியாவின் கொள்கைகளுக்கு ஆதரிக்க ஆஸ்திரேலியா நன்கு இடமளித்தது" என்று அவர் மேலும் கூறினார். ஆனால் இங்கே மிகப்பெரிய சவால் லித்தியம் கொள்முதல் ஆகும். லித்தியம் பூமியின் மேலோட்டத்தில் 0.002 சதவீதம் மட்டுமே உள்ளது. அதைப் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை ஆகும்.

Similar News