ஓபிஎஸ் திமுக இணைவு!! திமுக-அதிமுக நிர்வாகிகள் கருத்து!!
திமுக-வில் ஓபிஎஸ் இணைவது எக்ஸ்ட்ரா லக்கேஜ் என திமுக-வினர் கருதுகின்றனர். அதிமுக-வில் இருந்து வருபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கட்சி தலைமை, அவர்களுக்கு ஏற்கெனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பதவிகளை வாரி வழங்குகிறது என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் வருகையால் முக்குலத்தோர் வாக்குகளைப் பெறலாம் என திமுக தலைமை தப்புக் கணக்குப் போடுகிறது. ஆனால் முக்குலத்தோர், சசிகலா, டிடிவி.தினகரனையே அவ்வளவாக நம்புவதில்லை என திமுக-வினர் கூறுகின்றனர்.
அதிமுக-வினர், ஓபிஎஸ்-ஸுக்கு சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் திமுக புகழ் பாட ஆரம்பித்ததும் அவருக்கு பின்னால் கொஞ்ச நஞ்சமிருந்த முக்குலத்தோரும் அதிமுக-வுக்கு வந்துவிட்டார்கள் என அதிமுக-வினர் கூறுகின்றனர்.