உலகின் மருந்தகமாக உருவெடுத்த இந்தியா - ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி நான்கு முனை வியூகங்கள்!

Update: 2021-03-01 01:30 GMT

ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி நான்கு முனை வியூகங்களுடன் அரசு பணியாற்றி வருகிறது.

முதலாவதாக, "நோய்களை தடுத்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்". தூய்மையான இந்தியா திட்டம், யோகா, உரிய நேரத்தில் மருத்துவ சேவை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இரண்டாவதாக, "ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை வழங்குவது". ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் முதலிய திட்டங்கள் இதனை செயல்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகின்றன.

"சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார சேவையில் ஈடுபடுவோரின் தரத்தை உயர்த்துதல்" என்பது மூன்றாவது வியூகமாகும். இதை நிறைவேற்றுவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் விரிவாக்கப்படுவதுடன், நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

நான்காவது வியூகம், "இடர்பாடுகளை எதிர்கொள்ள அதிக ஆற்றல் சக்தியுடன் பணியாற்றுவது". நாட்டின் தொலைதூர இடங்களில் உள்ள பழங்குடி பகுதிகளுக்கு இந்திரதனுஷ் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காச நோயை 2030-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அதை விட 5 ஆண்டுகள் குறைவாக 2025-க்குள் இந்தியாவில் இந்த நோயை முற்றிலும் நீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் திவலைகளின் வாயிலாக பிறருக்கு இந்நோய் பரவுவதால், கொரோனா தொற்றைத் தடுக்க பின்பற்றப்பட்ட நெறிமுறைகளை, காசநோயைத் தடுக்கவும் பின்பற்றலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்துள்ளார். முகக் கவசங்கள் அணிவது, தொடக்கக் கட்டத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதும் காசநோயை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமாகும்.

சாமானிய மக்கள் தங்களது வசதிக்கேற்ப தரமான சிகிச்சையைப் பெறுவதில் டிஜிட்டல் சுகாதார இயக்கம் உதவியாக இருக்கும். தற்போது உலகின் மருந்தகமாக இந்தியா செயல்படுகிறது. 

Similar News