இந்தியாவின் மின்சார கட்டமைப்பை முடக்க குறி வைக்கும் சீன ஹேக்கர்கள் குழு - அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கை!

Update: 2021-03-02 01:30 GMT

அமெரிக்காவின் மாசசூசெட்ஸை தலைமையகமாக கொண்ட கொண்ட 'ரெக்கார்ட் ஃபியூச்சர்' நிறுவனம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய ஹேக்கர்கள் குழு, இந்தியாவின் மின் கட்டமைப்பை குறிவைத்து, 2020 அக்டோபரில் சைபர்  தாக்குதல் நடத்தியதாகவும், அது மும்பை மின் தடைக்கு வழிவகுத்தது என்று கூறியுள்ளது.

இந்தோ-சீனா எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், சீனாவுடன் தொடர்புடைய அச்சுறுத்தல் நடவடிக்கைக்குழு ரெட் எக்கோ இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முகிடம் 'மாநிலத்தின் மின் கட்டமைப்பு மீதான தாக்குதல்' குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2020 மே மாதத்திலிருந்து பல இந்திய அரசு பொதுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை இலக்கு வைத்து சீனா குழு சதி வேலைகளை செய்து வந்தது.

சீன இணைய உளவு நடவடிக்கை என்று கூறப்படுவதற்கு பிளக்எக்ஸ் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் திங்களன்று இந்த விமர்சனத்தை நிராகரித்தார், இது பொறுப்பற்றது மற்றும் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறான எண்ணம் என்று கூறினார்.

அமெரிக்க அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, சீன குழுவால் இந்தியாவின் மின் கட்டமைப்பு மீதான தாக்குதலை மத்திய மின்சார அமைச்சகம் ஒப்புக் கொண்டது.

தேசிய மின் கட்டமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஐபிகளும் ஸ்கேன் செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது. அக்டோபர் 12 ம் தேதி, கல்வாவில் எம்.எஸ்.இ.டி.சி.எல் 400 கே.வி. டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை முடக்கிய பின்னர், மும்பை பவர் கிரிட் தோல்வியை எதிர்கொண்டது, இது டாடா பவர் நெட்வொர்க்கின் தோல்விக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. 


Similar News