இந்துக்களின் புனித தளத்தில் சிலுவை போன்ற அமைப்பு! எழும் கேள்விகள்!

Update: 2021-03-03 07:57 GMT

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் எட்லபாடு பகுதியில் முன்னர் சீதா தேவியின் கால்தடம் இருந்த அந்த இடத்தில் தற்போது சட்ட விரோதமாக மிகப்பெரிய கிறிஸ்தவர்களின் சிலுவை எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட் செய்திருந்த ஆந்திரப் பிரதேச பா.ஜ.க இன்ச்சார்ஜ் சுனில் தியோதர், இந்த மிகப்பெரிய கட்டமைப்பு சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.


இது குறித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "சீதா தேவி கால்தடம் இருந்த அதே இடத்தில் தற்போது சிலுவை சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு உள்ளூர் பா.ஜ.க எதிர்ப்பதைத் தெரிவித்து போராட்டம் நடத்திய போதும் அதற்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுகின்றது," என்று சுனில் தியோதர் ட்விட் செய்திருந்தார்.

இந்துக்கள் இந்த புனித இடமாகக் கருதிப் பல திருமண சடங்குகளை அங்கு நடத்தி வருகின்றனர். பின்னர் கிறிஸ்தவர்கள் அங்கே வந்து இந்த இடம் மேரிக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க மற்றும் RSS எதிர்ப்பினை தெரிவித்தபோதும், உயர் அதிகாரி ஒருவர் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு வழங்குகிறார். குறிப்பாகச் சீதா தேவியின் கால்தடம் இடிக்கப்பட்டு சிலுவை எழுப்பப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரப் பிரதேசத்தில் எட்லபாடு பகுதியில் இந்து புனித இடம் கைப்பற்றப்பட்டு கிறிஸ்தவ மாஃபியாகளால் சிலுவை அமைக்கப்பட்டுள்ளது என்று ஆந்திரப் பிரதேச பா.ஜ.க தலைவர் விஷ்ணு வரதன் ரெட்டி குற்றம் சாட்டினார். அவர் டிவிட்டரில் பகிர்ந்த புகைப்படத்தில், ஒன்றில் சிலுவை அமைக்கப்பட்டிருப்பது காண்பிக்கப்பட்டது, மற்றொன்றில் கடவுள் நரசிம்மரின் சிலை செதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் மால் உள்ளிட்டவற்றைக் கட்டி மற்றும் அந்த பகுதியில் உள்ள முழு இடத்தையும் வணிகமயமாகியுள்ளனர்.


மேலும் இந்த குற்றச்சாட்டுக்களைத் தவிர்ப்பதற்கு குண்டூர் காவல்துறை டிவிட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தது. மலையில் ஒரு பகுதியில் இந்து புனித இடமாகக் கருதப்படுகின்றது இருப்பினும் சிலுவை அதற்கு எதிரே உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் சிலுவை அமைத்ததற்கான அதிகாரப்பூர்வ அதிகாரம் அவர்களிடம் உள்ளதா என்பதை குண்டூர் காவல்துறை தெளிவுபடுத்தவில்லை.

மேலும் டிவிட்டர் பயனாளர்கள் பலரும் இது குறித்துப் பல கேள்விகளை எழுப்பினர், அந்த இடம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதா, சிலுவை அமைப்பதற்குக் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று பல கேள்விகளை எழுப்பினர். மேலும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்றால் சிலுவை சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Similar News